விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. களமிறங்கிய சிறிது நேரத்திலேயே வேகப்பந்து வீச்சாளர் வீசிய ‘ஷார்ட் பிட்ச்’ பந்து ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்ரேயஸ் ஐயரின் ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியது.
இதனால் நிலைகுலைந்த அவருக்கு மைதானத்திலேயே மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த இக்கட்டான சூழலிலும் சற்றும் தளராத அவர், அடுத்த பந்திலேயே அதே போன்ற ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொண்டு மைதானத்திற்கு வெளியே பிரம்மாண்டமான சிக்ஸராக விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
1️⃣ ball: helmet hit
2️⃣ ball: SIX!🔥
That’s Stubborn Shreyas Iyer! 😎 pic.twitter.com/ffh6UW6arW— Sonu (@Cricket_live247) January 8, 2026
“>
இந்த ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 132-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 45 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதே போட்டியில் மும்பை அணியின் மற்றொரு வீரரான சர்பராஸ் கான், வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் ஹசாரே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
இருப்பினும், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 216 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி, இறுதியில் துரதிர்ஷ்டவசமாக வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் தோல்வியைத் தழுவியது. தோல்வியடைந்த போதிலும், ஹெல்மெட்டில் அடிபட்ட பிறகும் ஸ்ரேயஸ் ஐயர் காட்டிய மனஉறுதி ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
