பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஒரு தந்தை தனது நோய்வாய்ப்பட்ட மகளை மருத்துவமனையில் மகிழ்விக்க முயற்சிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கைகளில் ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருக்கும் சிறுமியைச் சிரிக்க வைக்க, அவளுடைய தந்தை படுக்கைக்குக் கீழே அமர்ந்து கொண்டு சோப்பு குமிழிகளை ஊதி விளையாடுகிறார்.
வலியிலும் வேதனையிலும் இருக்கும் தன் குழந்தை அந்தத் துன்பத்தை மறந்து சற்று நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தந்தை எடுக்கும் முயற்சி பார்ப்பவர் நெஞ்சங்களை உருக்குவதாக உள்ளது.
சுமார் 21 நொடிகள் ஓடும் இந்த உணர்ச்சிகரமான வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். “மருந்துகளை விட பெற்றோரின் அன்பும் அருகாமையும் தான் ஒரு குழந்தைக்குப் பெரிய பலம்” என்று பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
अस्पताल में एक भावुक पल देखने को मिला, जहाँ एक पिता अपनी बीमार बेटी को खुश रखने की कोशिश कर रहा था।
वह मुस्कुरा रहा था, उससे बातें कर रहा था और उसके पास रहकर उसका हौसला बढ़ा रहा था, लोगों ने महसूस किया कि पिता की मौजूदगी से बच्ची को सुकून मिला।
यह पल दिखाता है कि इलाज के… pic.twitter.com/vZVOrck9At
— JIMMY (@Jimmyy__02) January 7, 2026
“>
வீட்டின் மகிழ்ச்சியான சூழலில் விளையாட வேண்டிய வயதில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் மகளுக்காகத் தனது கவலையை மறைத்துக்கொண்டு ஒரு தந்தை புன்னகையோடு விளையாடும் இந்தக் காட்சி, தந்தையன்பின் ஆழத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
