வித்தியாசமான முயற்சிக்கு பேர் போனவர்கள் இந்தியாவில் குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், வடஇந்தியாவின் புகழ்பெற்ற ‘லிட்டி’ உணவைச் சமைக்கப் பெண் ஒருவர் கையாண்ட விசித்திரமான முறை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக நிலக்கரி அல்லது விறகு அடுப்பில் சுடப்படும் இந்த உணவை, அந்தப் பெண் அறையை வெப்பப்படுத்தும் ‘ரூம் ஹீட்டரில்’ வைத்துச் சமைக்கிறார். ஹீட்டரின் கம்பிகளுக்கு இடையே லிட்டியை வைத்து லாவகமாக அவர் சுடும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “ஒரே கல்லில் இரண்டு மாங்காய், குளிரும் காயலாம்.. சமையலும் செய்யலாம்” என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், மின்சார ஹீட்டரில் இப்படிச் சமைப்பது ஆபத்தானது என்றும், மின்சார விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் யாரும் இதை முயற்சிக்க வேண்டாம் என்றும் சிலர் எச்சரிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sweta Priyedarshi (@angelsingh.2021)

“>

நகரங்களில் வசிப்பவர்களுக்குப் போதிய வசதி இல்லாதபோது இதுபோன்ற புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், பாதுகாப்பு மிக முக்கியம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.