மும்பை பாஜக தலைவர் அமீத் சதம், மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த், பாஜகவினர் தூங்கும்போதும் கனவு காணும்போதும் கூட முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள் என்றும், கடவுள் ராமர் பெயரை உச்சரிப்பதை விட முஸ்லிம் என்ற வார்த்தையையே அவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடக்காத போது, இந்தத் தகவல் சதமிற்கு எப்படி கிடைத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தவிதமான முறையான ஆய்வும் இல்லாமல் பேசுவதால் பாஜக ஒரு முட்டாள் கட்சி எனச் சாடிய சச்சின் சவந்த், ‘வோட் ஜிகாத்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாஜகவினர் வாக்காளர்களைக் கேவலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
