ராஜஸ்தான் மாநிலம் பீன்மால் அருகே உள்ள கோடி கிராமத்தில், பேருந்தும் டிராக்டரும் பயங்கரமாக மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹைதராபாத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் முன்னால், பள்ளி குழந்தைகளை இறக்கிவிட்டுத் திரும்பிய டிராக்டர் ஓட்டுநர் திடீரென வாகனத்தைத் திருப்பியுள்ளார்.

எதிர்பாராத விதமாக பேருந்து டிராக்டர் மீது பலமாக மோதியதில், டிராக்டர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தின் காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கின்றன. இந்த விபத்து குறித்து இணையவாசிகள் பலரும் டிராக்டர் ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘இந்தியச் சாலைகள் ஃபைனல் டெஸ்டினேஷன் திரைப்படம் போல ஆபத்தானவை’ என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாததே இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.