பெங்களூரு சர்வதேச விமான நிலைய சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் தம்பதியரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் போதே அதன் ஒரு கதவு திடீரெனத் திறக்கப்படுகிறது.
மேலும் காருக்குள் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒருகட்டத்தில் கார் நிலைதடுமாறி சாலையில் அங்குமிங்கும் ஆபத்தான முறையில் அலைபாய்ந்தது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தங்கள் வாகனங்களை நிறுத்தினர்.
A quarrel between a couple inside a taxi near Kempegowda International Airport caused panic after the vehicle was seen swerving with its rear door open before stopping near a CISF checkpoint.
Tune in for more LIVE updates: https://t.co/sTbZtc88AU#RepublicTV #BreakingNews… pic.twitter.com/OpBqIRXbnd
— Republic (@republic) January 5, 2026
“>
இந்தச் சம்பவத்தின் போது காரின் கதவு திறந்தே இருந்ததால், காருக்குள் இருந்தவர்கள் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தைச் செலுத்தியது மற்றும் பொது இடத்தில் ஆபத்தான முறையில் நடந்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையத்திற்குச் செல்லும் பரபரப்பான சாலையில் அரங்கேறிய இந்த “கார் சண்டை” நாடகம், அங்கிருந்த பயணிகளையும் வாகன ஓட்டிகளையும் ஒரு நிமிடம் உரைய வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
