விளையாட்டு உலகில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். தனது பேட்டிங் புள்ளிவிவரங்கள் குறித்துப் பேசும்போது, தன்னைத் தானே கிண்டல் செய்துகொண்ட அவர், தனது சில மோசமான ஆட்டங்களை “கேவலமான புள்ளிவிவரம்”என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

ஒரு நட்சத்திர வீரர் தனது குறைகளை இவ்வளவு நேர்மையாகவும், விளையாட்டாகவும் ஒப்புக்கொண்டது அங்கிருந்த செய்தியாளர்களைப் பெருத்த சிரிப்பில் ஆழ்த்தியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. டிராவிஸ் ஹெட்டின் இந்த வெளிப்படையான பேச்சு, அவர் களத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறாரோ, அதே அளவு களத்திற்கு வெளியே நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by cricket.com.au (@cricketcomau)

“>

மேலும் பொதுவாக வீரர்கள் தங்களின் சாதனைகளைப் பெருமையாகப் பேசும் நிலையில், ஹெட் எதார்த்தமாகத் தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், டிராவிஸ் ஹெட்டின் நேர்மையான மற்றும் கலகலப்பான குணத்திற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.