குளிர் காய தீ மூட்டி அமர்ந்திருந்த நண்பர்களுக்கு இடையே நடந்த ஒரு விளையாட்டான மோதல் விபரீதமாக முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை விளையாட்டாக தட்டிவிட அவர் கீழே விழுந்தார்.
View this post on Instagram
இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர் யாருக்கும் தெரியாமல் அந்த நாற்காலியில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். சிறிது நேரம் கழித்து அந்த நாற்காலியில் மீண்டும் வந்து அமர்ந்த இளைஞர் மீது தீக்குச்சியை உரசி எறிந்தவுடன் அவரது ஆடையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் நிலைகுலைந்த அவர் தரையில் உருண்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விளையாட்டு விபரீதமான இந்த காட்சியை பலரும் இணையத்தில் பகிர்ந்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
