தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்று உலக அளவில் சாதனை படைத்த தமிழகத்தின் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பாராட்டினார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் சில நிமிடங்கள் செஸ் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்த சுவாரசியமான தருணம் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சாதனை புரிந்த பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 50 லட்சத்திற்கான ஊக்கத்தொகை காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கிக் கௌரவித்தார்.

“>

இத்தகைய உயரிய ஊக்கத்தொகை இளம் வீரர்களின் உத்வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும், செஸ் விளையாட்டில் தமிழகம் உலக அரங்கில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.