அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, திமுக அரசு மீது பல்வேறு துறைகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல்களைப் பட்டியலிட்டு ஒரு புகார் மனுவை அளித்தார்.

ஊழல் புகார் பட்டியல் விவரம்:

• நகராட்சி நிர்வாகம் – ரூ. 64,000 கோடி ஊழல்
• சென்னை மாநகராட்சி – ரூ. 10,000 கோடி ஊழல்
• தொழில் துறை – ரூ. 8,000 கோடி ஊழல்
• பள்ளிக்கல்வித் துறை – ரூ. 5,000 கோடி ஊழல்
• வேளாண் துறை – ரூ. 5,000 கோடி ஊழல்
• சமூக நலத்துறை – ரூ. 4,000 கோடி ஊழல்
• இந்து சமய அறநிலையத்துறை – ரூ. 1,000 கோடி ஊழல்
• ஆதி திராவிட நலத்துறை – ரூ. 1,000 கோடி ஊழல்
• இளைஞர் நலத்துறை – ரூ. 500 கோடி ஊழல்
• சுற்றுலாத் துறை – ரூ. 250 கோடி ஊழல்

மொத்த ஊழல் குற்றச்சாட்டு – ரூ. 4 லட்சம் கோடி (4.5 ஆண்டுகளில்)