சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு விசித்திரமான காணொலிகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு நபர் தனது மனைவியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளிப்பாட்டப்படும் காட்சி இணையவாசிகளிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
कैसे-कैसे लोग रहते हैं जो ठंड में नहीं आते हैं उसको पति ने बड़ी हो सकत से उसको पकड़ कर बांधकर नहा रही है pic.twitter.com/I4UmVDrdOa
— Kalyoptra (@kalyoptra_y) January 3, 2026
குளிர்காலங்களில் குளிக்கத் தயங்கும் சிறுவர்களை தாய்மார்கள் கட்டாயப்படுத்தி குளிப்பாட்டுவதை நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கு திருமணமான ஒரு நபர் நீண்ட நாட்களாக குளிக்காமல் இருந்த காரணத்தால் அவரது மனைவி கணவரின் கை கால்களை அடிபம்புடன் சேர்த்து கயிற்றால் கட்டிவைத்து வலுக்கட்டாயமாக குளிப்பாட்டுகிறார்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ள இக்காணொலியைப் பார்த்த பயனர்கள் இது மனைவியின் பாசம் என்று ஒருபுறம் வேடிக்கையாகக் குறிப்பிட்டாலும் மற்றொரு தரப்பினர் இது கணவருக்கு இழைக்கப்படும் கொடுமை மற்றும் வன்முறை என தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
