சமூக வலைதளங்களில் காடுகள் தொடர்பான பல்வேறு சுவாரசியமான காணொலிகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று காண்டாமிருகத்தை வேட்டையாட முயன்று தோல்வியடைந்த வினோதமான காட்சி இணையவாசிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. திறந்தவெளி புல்வெளியில் இரை தேடிச் சென்ற சிறுத்தை ஒன்று அங்கிருந்த பிரம்மாண்டமான காண்டாமிருகத்தை பின்னால் இருந்து திடீரென பாய்ந்து தாக்க முயன்றது.
View this post on Instagram
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக காண்டாமிருகம் வெளியிட்ட ஒருவிதமான வாயு மற்றும் துர்நாற்றத்தால் நிலைதடுமாறிய சிறுத்தை தனது வேட்டைத் திட்டத்தை கைவிட்டு அதிர்ச்சியில் பின்வாங்கியது. காண்டாமிருகத்தின் இந்த விசித்திரமான தற்காப்பு முறையைக் கண்டு வியந்த இணையவாசிகள் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையே ஒரு பாதுகாப்பு கவசத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு இக்காணொலியை வைரலாக்கி வருகின்றனர்.
