புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு சுந்தர், பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதற்கெடுத்தாலும் பிரதமரை விமர்சிப்பதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதையும் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், தமிழகத்திற்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ள போதிலும், திமுக அரசு நிதி ஒதுக்கவில்லை என்று பொய்க் குற்றம் சாட்டி வருவதாகக் குஷ்பு தெரிவித்தார்.

திமுக என்பது பாஜகவின் எதிரி மட்டுமல்ல, அது மக்களின் எதிரி, நாட்டின் எதிரி மற்றும் சனாதன தர்மத்திற்கு எதிரானது என்று விமர்சித்த அவர், திமுக அரசு கடவுளுக்கே எதிரியாகச் செயல்படுவதாகவும் தனது உரையில் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டார்.