கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த விபத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு காரணம் என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மிக வேகமாக உடற்கூராய்வு செய்து முடித்ததன் மூலம், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை அரசு காப்பாற்றிவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.