தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே அது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரைலர் இந்த விவாதத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. அந்த டிரைலரில் நடிகர் விஜய் தீப்பந்தம் ஏந்தி காட்டுப்பகுதிக்குள் வருவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது அவருக்கு இருபுறமும் யானைகள் தங்களது முன்னங்கால்களைத் தூக்கி வரவேற்பது போன்ற ஒரு பிரம்மாண்டமான காட்சி காட்டப்படுகிறது.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ‘ஜனநாயகன்’ படத்தில் வரும் இந்த யானை காட்சியையும், தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கும் யானை சின்னத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அந்தத் திரைப்படத்தின் காட்சியே கொடி உருவாக்கத்திற்கு ஒரு முக்கிய ரெஃபரன்ஸாக (Reference) இருந்திருக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த இரண்டு காட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
