சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் மனப்பாங்கு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு கருப்பு நிற தார் ரக சொகுசு காரை ஓட்டும் நபர், காலியாக உள்ள அகலமான சாலையை விட்டுவிட்டு, வேண்டுமென்றே நடைபாதையிலும் சாலைத் தடுப்புகள் மீதும் காரை ஏற்றி ஓட்டும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
Ye Thar wale chapri🤦♂️
What’s going on? @amrohapolice @Uppolice @uptrafficpolicepic.twitter.com/47UAoH87T2— Deadly Kalesh (@Deadlykalesh) January 4, 2026
காரின் பாதி சக்கரம் நடைபாதையிலும் பாதி சக்கரம் சாலையிலுமாக ஆபத்தான முறையில் செல்வதைப் பார்த்த பொதுமக்கள், இது போன்ற செயல்கள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தார் போன்ற சக்திவாய்ந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதுகிறார்களா என்றும், இத்தகைய ‘கெத்து’ காட்டும் மனப்பான்மை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இணையவாசிகள் குமுறி வருகின்றனர்.
