சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு சுவாரசியமான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், மீன் கடையில் திருட முயன்று பிடிபட்ட பூனைக்குட்டி ஒன்றின் வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மீன் கடை ஒன்றிற்குள் மிகவும் சாமர்த்தியமாக நுழைந்த அந்தச் சிறிய பூனைக்குட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய மீன் ஒன்றை நைசாகத் தனது வாயால் கவ்விக்கொண்டு தப்பிக்க முயன்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Coco Oreo & Adaa l Petfluencer (@coconoreo_ki_adaa)

ஆனால் அங்கிருந்த நபர் ஒருவர் அதனைக் கவனித்து பூனையிடமிருந்து மீனைப் பறிக்க முயன்றபோது, அந்தப் பூனைக்குட்டி பிடிவாதமாக மீனை விட மறுத்துப் போராடியது. இறுதியில் அந்த நபர் மீனை மீட்டவுடன், ஏமாற்றமடைந்த பூனைக்குட்டி ஒரு சிறு குழந்தையைப் போலத் தரையில் உருண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சி பார்ப்போரைச் சிரிக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் ரசித்து வருவதுடன், அந்தப் பூனைக்குட்டியின் நடிப்புத் திறமை ஒரு திரைப்படக் கலைஞருக்கே சவால் விடும் வகையில் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.