மயிலாடுதுறையில் இன்று (ஜன.4) நடைபெற்ற ‘பெரியாரை போற்றுவோம்’ பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா பெரியார் குறித்து ஒரு மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு வேண்டுமானால் ஈ.வெ.ரா பெரியார் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம்; ஆனால், தங்களைப் பொறுத்தவரை ராமதாஸும், திருமாவளவனுமே பெரியார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் சீமான், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா பெரியாரை விட, தற்போதுள்ள தலைவர்களான ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரே தங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதைத் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
