மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ மக்கள் நடைபயணம் நிகழ்ச்சியை நேற்று தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அழைப்பிதலில் இடம்பெற்ற ஒரு புகைப்படம் தொடர்பாக காங்கிரஸ் மட்டும் அந்த விழாவை புறக்கணித்தது. நேற்று முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவை தொடங்கி வைத்த நிலையில் வைகோவுக்கு 82 வயதா 28 வயதா என்பது தெரியவில்லை இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
#WATCH | சமத்துவ நடைபயணத்தின்போது சிலம்பம் சுற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!#SunNews | #Vaiko | #Tiruchi pic.twitter.com/uRran2EKzP
— Sun News (@sunnewstamil) January 4, 2026
அவர் நடைபயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுட்டிக்காட்டியதோடு உடல் நலத்தை கருத்தில் கொண்டு இனி இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் நடை பயணங்கள் மூலமே மக்களை சந்திப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று வைகோ தன்னுடைய சமத்துவ நடை பயணத்தின் போது சிலம்பம் சுற்றி அசத்தினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது மிகவும் வைரலாகி மதிமுக கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
