தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு நாட்களுக்குள் ரேஷன் கடைகள் மூலம் இந்த டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி 8-ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
