அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஐஷோஸ்பீட்’ சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரிடம் நடந்துகொண்ட விதம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரலை வீடியோ ஒன்றின் போது, ரசிகர் ஒருவர் அவரிடம் வந்து “நான் வங்கதேசத்தைச் சேர்ந்தவன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உடனே அதிருப்தியடைந்த ஸ்பீட், “நீ வங்கதேசமா? நான் இந்தியாவைச் சேர்ந்தவன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகள் மற்றும் சமீபத்திய கொலைச் சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்பீடின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய இணையவாசிகள், ஸ்பீடுக்கு ஆதரவாகப் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இவருக்கு உடனே ஆதார் கார்டு கொடுங்கள்” என்றும், “பல இந்தியர்களை விட இவர் உண்மையான இந்தியராக இருக்கிறார்” என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Brief Chaat | News, Culture, Viral stories | India (@briefchaat)

“>

அதே சமயம், வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து வரும் அரசியல் தலைவர்கள், இத்தகைய சூழலில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போன்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.