ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான கதையில் ஆமை மந்தமானது என்று நாம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், தற்போதைய ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் மாறிவிட்டன என்பதைக் காட்டும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு நாய் ஆமையை வேட்டையாட முயற்சிப்பதைக் காணலாம். நாயின் தொடர் தொந்தரவால் ஆத்திரமடைந்த ஆமை, யாரும் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் நாயின் நாக்கைக் கவ்விப்பிடித்தது. ஆமையின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் அந்த நாய் வலியால் துடிப்பதும், நிலைகுலைந்து போவதும் பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.
<a href=”http://

“>
சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “முயலுக்கு நேர்ந்த கதிதான் நாய்க்கும் நேர்ந்துள்ளது” என ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

“மெதுவாகச் செல்லும் ஆமை கூட சரியான நேரத்தில் தனது புத்திசாலித்தனத்தால் எதிரியை வீழ்த்தும் என்பதற்கு இதுவே சாட்சி” என்று மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 3-ஆம் தேதி பதிவிடப்பட்ட இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், ஆமையின் இந்த ‘ரௌத்ர ரூபம்’ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.