அப்பாவித்தனமான முகம் மற்றும் போலியான அவசர கதைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் பெண் ஒருவரிடம் பருப்பு மூட்டை எனக்கூறி கோதுமையை விற்றுச் சென்ற நூதன மோசடி அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்மணியின் வீட்டின் அருகே வந்த இரு நபர்கள், தங்கள் லாரியில் சரக்குகள் அனைத்தும் காலியாகிவிட்டதாகவும், ஒரே ஒரு மூட்டை மட்டுமே மிஞ்சியுள்ளதாகவும் கூறி, அதனை மலிவான விலைக்கு வாங்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.
நம்பிக்கையை ஏற்படுத்த, அந்த மூட்டையின் ஒரு பகுதியில் சாவியால் ஓட்டையிட்டு காண்பித்தபோது, அதிலிருந்து பருப்பு வெளியே வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்தப் பெண், பருப்பிற்கான விலையைக் கொடுத்து அந்த மூட்டையை வாங்கியுள்ளார்.
விற்பனை முடிந்த பிறகு, அந்த நபர்களே மூட்டையை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற பிறகு மூட்டையைப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். மூட்டையின் ஓரங்களில் மட்டும் பருப்பை அடைத்துவிட்டு, உள்ளே முழுவதும் தரம் குறைந்த கோதுமையை நிரப்பி அந்த நபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து ‘ஆயிஷா’ (aaishavlogs1992) என்ற பெயரில் வீடியோ வெளியிட்ட அந்தப் பெண், “யாரும் அறிமுகமில்லாத நபர்களிடம் இதுபோன்று பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், மர்ம நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்பதால், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
