சமூக வலைதளங்களில் அவ்வப்போது விசித்திரமான உணவு முறைகள் குறித்த காணொளிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Swayam Srivastav (@mainswayamhoon)

அந்த வீடியோவில் பெண் ஒருவர் வாணலியில் உள்ள சாதத்துடன் சாக்லேட் துண்டுகள், முட்டை, தக்காளி, பழச்சாறு, பால் மற்றும் ஒரு பாக்கெட் சர்க்கரை என எதற்கும் சம்பந்தமில்லாத பொருட்களைச் சேர்த்து ஒரு விசித்திரமான உணவைத் தயாரிக்கிறார்.

ஏற்கனவே ஃபாண்டா ஆம்லெட் மற்றும் சாக்லேட் பானிபூரி போன்ற வினோத உணவுகள் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சமையல் பரிசோதனையைப் பார்த்த நெட்டிசன்கள் உணவை வீணாக்க வேண்டாம் என்றும், அரிசிக்கு இழைக்கப்பட்ட அநீதி இது என்றும் கடுமையாகக் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த விசித்திரமான கலவைக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் பலரும் பல்வேறு விதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.