சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், இரண்டு பெண்கள் நடுரோட்டில் கடுமையாக வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த ஒரு மனைவி, ஆத்திரமடைந்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தனது கணவருடன் இருந்த அந்தப் பெண்ணை வழிமறித்து அந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது.
Extra-Marital affair Kalesh (Wife Caught her husband with someone else's inside Car)
pic.twitter.com/YxGMKqNwJ3— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 1, 2026
பொது இடமென்றும் பாராமல் இந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். கணவரின் தவறான உறவால் ஒரு குடும்பமே வீதிக்கு வந்து சண்டையிடும் இந்த அவலக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துரோகமும், ஆத்திரமும் கலந்த இந்த மோதல், திருமண உறவுகளில் ஏற்படும் விரிசல்களையும் அதன் விளைவுகளையும் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
