சர்வதேச சந்தை நிலவரப்படி ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புத்தாண்டு தினத்தை அதாவது ஜனவரி 1ஆம் தேதியை முன்னிட்டு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் வரையில் உயர்ந்து 1849.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதே நேரத்தில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 869.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.