உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்த நிலையில் மக்கள் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் புத்தாண்டு பிறந்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் நிலையில் சென்னையில் மழையுடன் புத்தாண்டு பிறந்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முல்லை நகரில் 11 cm அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எண்ணூர் எருக்கஞ்சேரியில் 9 சென்டிமீட்டர் மழையும், விம்கோ நகர் மாதவரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், அண்ணா நகர் மதுரவாயில் பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும், வில்லிவாக்கம், மணலி மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் பல இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் மழையிலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
