உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று மிரட்டி துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A woman in #UttarPradesh‘s #Lucknow, was waylaid and confronted by men who accused her of abusing Prime Minister #NarendraModi.
The visibly angry men could be heard threatening and verbally abusing the woman while calling her a “terrorist.” pic.twitter.com/K8mHcJwlGg
— Hate Detector 🔍 (@HateDetectors) December 29, 2025
மோட்டார் சைக்கிளில் சென்ற அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்த நபர், அவர் பிரதமரை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அப்பெண்ணை பயங்கரவாதி என விளித்து மத ரீதியான வசவுகளை வீசியுள்ளார். இந்த மோதலின் போது தான் யாரையும் தவறாகப் பேசவில்லை என்றும், நகைச்சுவையாகக் கூறிய கருத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் அந்தப் பெண் பலமுறை விளக்கம் அளித்தும் அக்கூட்டம் அவரைத் தொடர்ந்து அச்சுறுத்தியது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி மற்றும் கும்பல் வன்முறை மனப்பாங்கு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
