புதுடெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யவிருந்த வெளிநாட்டு பெண் வோல்கர் ஒருவரை, மர்ம நபர் ஒருவர் ஏமாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர், பெண்ணின் டிக்கெட் செல்லாது என்றும், ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.

மேலும் பெண்ணை ரயிலில் ஏறவிடாமல் தடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கில் ஒரு தனியார் வாகனத்தை (டாக்ஸி) முன்பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த பெண் வோல்கர், அவர் சொன்னது பொய் என்பதை உணர்ந்து ஆவேசமடைந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Klaudia Falenta | Travel Content Creator (@klauditravels)

“>

இந்தச் சம்பவம் முழுவதையும் தனது கேமராவில் பதிவு செய்த அந்தப் பெண், இந்திய ரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடக்கும் இத்தகைய மோசடிகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகளிடம் இதுபோன்ற அநாகரீகமான முறையில் நடந்துகொள்வது நாட்டின் புகழைக் கெடுக்கும் செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.