இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் காரினுள் சிகரெட் பாக்கெட் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு தோனி தனது காரில் திரும்பியபோது எடுக்கப்பட்ட வீடியோவில், காரின் டேஷ்போர்டு பகுதியில் சிகரெட் பாக்கெட் போன்ற ஒரு பொருள் இருப்பது கேமராவில் சிக்கியது.
இந்த ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் தோனி, தனது உடற்தகுதியை மிகவும் பேணுபவர் என்பதால், இந்த காட்சி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தோனி தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் இது தோனியுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், அவருடன் காரில் பயணித்த நண்பர்களுடையதாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
அதே சமயம், புகையிலை பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு ஆரோக்கியமானதல்ல எனச் சுட்டிக்காட்டி மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், உண்மைத்தன்மை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
