சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இயற்கையின் உக்கிரமான மற்றும் ஆச்சரியமான ஒரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. நீர்நிலைக்கு அருகே தண்ணீர் குடிக்கச் சென்ற ஒரு யானையின் தும்பிக்கையை, அங்கு மறைந்திருந்த முதலை ஒன்று மின்னல் வேகத்தில் கவ்விப் பிடிக்கிறது.
மேலும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த யானை, வலியால் துடித்தாலும் தன் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி முதலையிடமிருந்து விடுபடப் போராடுகிறது. நீருக்குள் இழுக்க முயலும் முதலையும், நிலத்தை நோக்கி பின்வாங்கும் யானையுமாக நடக்கும் இந்தப் உயிர் பிழைப்புப் போராட்டம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
— African prides (@rungunyika) December 27, 2025
“>
இந்தக் காட்சியின் இறுதியில், யானை தனது அசாத்தியமான வலிமையால் முதலையை நீரிலிருந்து வெளியே இழுத்து வந்து தரையில் வீசுகிறது. தும்பிக்கையை விடுவிக்க யானை காட்டிய ஆக்ரோஷத்திற்கு முன்னால் முதலையின் பிடி தளர்ந்து போகிறது.
இறுதியில் யானை காயங்களுடன் உயிர் தப்பிச் செல்கிறது. இயற்கையில் வேட்டை விலங்குகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே நடக்கும் இத்தகைய போராட்டங்கள், உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
