இண்டோனேசியாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமேடையில் மணமகனுக்கு முத்தமிட முயன்ற இளம்பெண்ணை மணப்பெண் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியர் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளம்பெண் ஒருவர் மணமகனுக்கு கைகொடுப்பது போல நடித்து, அவரது கையில் முத்தமிட முயன்றுள்ளார்.
इंडोनेशिया में एक शादी के दौरान, फोटो सेशन के समय दूल्हे की पूर्व प्रेमिका पोडियम पर चढ़ गई और दुल्हन के सामने उसके हाथ को चूमने की कोशिश की।
फिर क्या दुल्हन ने पत्नी धर्म निभाते हुए तुरंत ही पूर्व प्रेमिका के बालों को पकड़ धक्का दे डाला। pic.twitter.com/VnfbWpIMby
— Dr. Sheetal yadav (@Sheetal2242) December 27, 2025
மணமகனின் முன்னாள் காதலி எனக் கூறப்படும் அந்தப் பெண்ணின் இத்தகைய செயலால் ஆத்திரமடைந்த மணப்பெண், சற்றும் யோசிக்காமல் அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளினார். வெறும் 11 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
மணப்பெண்ணின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அங்கிருந்த விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சமூக வலைதளப் பயனாளர்கள் பலர் மணப்பெண்ணின் தைரியத்தைப் பாராட்டியும், சிலர் நகைச்சுவையாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
