தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்எ20 கிரிக்கெட் தொடரில், மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் ஒற்றைக் கையில் பிடித்த அபாரமான கேட்ச் அவருக்கு சுமார் 1.08 கோடி ரூபாயைப் (2 மில்லியன் ரேண்ட்) பரிசாகப் பெற்றுத் தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற எம்ஐ கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. சன்ரைசர்ஸ் வீரர் அடித்த பந்து சிக்ஸருக்குப் பறந்து வர, ஸ்டேண்டில் இருந்த அந்த ரசிகர் மின்னல் வேகத்தில் ஒற்றைக் கையால் அந்தப் பந்தைப் பிடித்தார்.

“>

இந்தத் தொடரில் ‘பெட்வே கேட்ச் 2 மில்லியன்’ என்ற ஒரு சிறப்புப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மைதானத்தில் சிக்ஸராக வரும் பந்தை ரசிகர்கள் யாரேனும் ஒற்றைக் கையால் சரியாகப் பிடித்தால், அவர்களுக்கு இந்த பெரும் தொகை பரிசாக வழங்கப்படும்.

இதுபோன்ற போட்டியின் விதிமுறைப்படி, இந்தத் தொடரில் ஒற்றைக் கையில் கேட்ச் பிடிக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்தப் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள். தற்போது இந்த ரசிகர் முதல் ஆளாக இந்தப் சாதனையைப் படைத்துள்ளதால், சமூக வலைதளங்களில் அவர் பிடித்த அந்த “பிளைண்டர்” கேட்ச் வீடியோ வைரலாகி வருவதுடன், கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.