இங்கிலாந்தில் கடந்த மே மாதம் பூங்காவுக்குச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை, மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் மற்றும் நைசல் ஆகிய 17 வயது சிறுவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு வார்விக்ஷெரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இதில் ஜன் ஜஹன்பெசுக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்களும், நைசலுக்கு 9 ஆண்டுகள் 10 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.