சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் அத்தகைய பயங்கரமான காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் படகின் மீது படுத்துக்கொண்டு தண்ணீரில் சிக்கிய ஒரு பெரிய மீனை மேலே இழுக்க முயற்சி செய்கிறார். அப்போது தண்ணீர் மிகவும் அமைதியாக இருக்கிறது.
ஆனால், அவர் மீனைப் பிடித்த அடுத்த நொடியே தண்ணீருக்குள் ஒரு பெரிய அசைவு ஏற்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பிரம்மாண்டமான முதலை மின்னல் வேகத்தில் வந்து அந்த மீனைத் தாக்குகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், நூலிழையில் உயிர் தப்பி உடனடியாக மீனை விட்டுவிட்டு பின்வாங்குகிறார்.
Crocodile comes out of nowhere to snag the fish pic.twitter.com/XPW1wdwjiK
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 26, 2025
“>
இந்தக் கொடூரமான வீடியோ (X) தளத்தில் @AMAZlNGNATURE என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மீன் பிடிக்கச் சென்றவர் முதலையிடம் சிக்கித் தப்பித்த இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அந்த நபர் முதலையின் இரையாகி இருப்பார்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எவ்வளவு அமைதியான நீர்நிலையாக இருந்தாலும், அதற்குள் மறைந்திருக்கும் ஆபத்துகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
