புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் குடும்பத் தலைவிகள் மற்றும் முதியோர்களுக்குத் தீபாவளி மற்றும் புத்தாண்டுப் பரிசாக அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேபோல், முதியோர் உதவித்தொகையும் ரூ.500 உயர்த்தப்பட உள்ளது. மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்கனவே வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமையுடன் கூடுதலாக, ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் புதுச்சேரி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
