கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு, இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அந்த வாகனத்தில் இருந்து அதிக அளவில் இரைச்சல் எழுப்பியதை கவனித்த அங்கு பணியிலிருந்த காவலர், அந்த இளைஞரைக் கண்டித்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் காவலருக்கு ஆபாசமான செய்கைகளைக் காட்டிவிட்டு, வேண்டுமென்றே வாகனத்தின் வேகத்தை அதிகரித்து (Accelerator) அதிக சத்தத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

​மறுநாளே அந்த இளைஞரைக் காவல்துறையினர் தேடிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்குத் தக்க புத்திமதி கூறப்பட்டது. தான் செய்த செயலுக்காக வருந்திய அந்த இளைஞர், தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.