எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், சாலையில் சென்றவர்களுக்குச் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறான். இதைப் பார்த்த நபர் ஒருவர், “நீ கிறிஸ்தவனா? அப்புறம் ஏன் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்கிறாய்?” என்று அந்தச் சிறுவனை மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் கோபமடைந்த அந்தச் சிறுவன், அந்த நபரின் காலை மிதிக்க, அவர் வலியால் “மா…” என்று கத்துகிறார். உடனே அந்தச் சிறுவன், “நீங்க மாடா?” என்று கேட்க, அவரோ “நான் மனுஷன்” என்கிறார். அதற்குச் சிறுவன், “அப்புறம் ஏன் மாடு மாதிரி கத்துறீங்க?” என்று அவரைப் பேச்சுவாக்கிலேயே மடக்குகிறான்.
பசங்க Content 🔥👌
Happy Christmas ❤️ pic.twitter.com/tHWtY4Qzhf
— நிதன் சிற்றரசு (@srinileaks) December 26, 2025
தொடர்ந்து அந்த நபரைப் பார்த்து, “உங்க பருப்பு இங்க வேகாது, உங்க படம் எல்லாம் இங்க ஓடாது… இது தமிழ்நாடு!” என்று கெத்தாகப் பதிலடி கொடுக்கிறான். தன்னை மிரட்டிய அதே நபருக்கு மீண்டும் ஒருமுறை “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து நகர்கிறான். சிறுவனின் இந்த சமயோசிதமான பேச்சும், மிரட்டிய நபரையே கேலி செய்து பாடம் புகட்டிய விதமும் இணையவாசிகளிடம் (Netizens) பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
