சர்வதேச அளவில் இந்தியர்களுக்கு ஏற்படும் அவமதிப்பு குறித்த காணொளி ஒன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், வியட்நாம் நாட்டுப் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக அவர் சொன்ன அடுத்த கணமே, அந்தப் பெண் புன்னகைத்தபடி “நீங்கள் இந்தியரா? அப்படியானால் பை பை (Bye bye)” என்று கூறிவிட்டு அங்கிருந்து உடனடியாக நகர்கிறார். இந்தியர் என்று சொன்னதுமே அந்தப் பெண் காட்டிய இந்த அலட்சியமான எதிர்வினை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



இந்தப் பதிவைப் பகிர்ந்தவர், “உலக அளவில் இந்தியர்கள் ஏன் இத்தகைய வெறுப்பையும் அவமதிப்பையும் சந்திக்கிறார்கள் என்பதை நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை (Passport Ranking) 85-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மீதான பார்வை ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது என்ற கேள்வியுடன் பகிரப்பட்டுள்ள இந்தப் பதிவு, தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.