இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் கியூஆர் கோட் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்வது மக்களிடையே பெரும் வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், வணிகர்கள் மற்றும் கியூஆர் கோட் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறும் அனைத்துத் தரப்பினரும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒரு முக்கியமான பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைச் சரிவரச் செய்யத் தவறினால், செப்டம்பர் 15-க்குப் பிறகு பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் போவதுடன், பெரும் நிதி இழப்பையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும் என்ற தகவல் வணிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கிலும், வாடிக்கையாளர்களின் பணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் வங்கிகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே, கியூஆர் கோட் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்களின் KYC விவரங்களைப் புதுப்பித்தல் மற்றும் கணக்குச் சரிபார்ப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறையை முழுமையாக முடிக்காத கணக்குகள் செப்டம்பர் 15 முதல் முடக்கப்படவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படவோ அதிக வாய்ப்புள்ளது.

எனவே, கியூஆர் கோட் சேவையைப் பயன்படுத்தும் சிறு குறு வணிகர்கள் மற்றும் கடமைய உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் உடனடியாகத் தங்களது வங்கி கணக்கு மற்றும் சேவை வழங்கும் செயலிகளில் KYC விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் கடைசி தேதி வரை காத்திருக்காமல், இன்றே இந்தச் சரிபார்ப்புப் பணியை முடித்துவிட்டால் செப்டம்பர் 15-க்குப் பிறகு வர்த்தகம் தடையின்றி நடப்பதுடன், தேவையற்ற நிதிப் பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். அலட்சியமாக இருந்துவிட்டால் பின்னடைவுகளையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அனைத்து வணிகர்களும் இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.