அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஏடிஎம் எந்திரத்தைத் திருட முயன்ற மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ் பகுதியில் திருடப்பட்ட சொகுசு கார் ஒன்றில் வந்த இரு நபர்கள், ஏடிஎம் எந்திரத்தை இரும்புக் கம்பி மூலம் காரில் கட்டி, கடையின் சுவரை உடைத்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

 

இதில் கடையின் முன்பக்கக் கதவு மற்றும் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்தன. எந்திரத்தைச் சாலையில் இழுத்துச் சென்றபோது, அது காரில் இருந்து கழன்று விழுந்ததால் கொள்ளையர்கள் அதனை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஏடிஎம் எந்திரத்தைக் மீட்டதுடன், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற காரையும் கைப்பற்றினர்.

கடந்த இரண்டு வாரங்களில் அண்டை நகரங்களில் இது போன்ற மூன்று சம்பவங்கள் நடந்துள்ளதால், தொடர் திருட்டில் ஈடுபடும் இந்தக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.