இந்தோனேசியாவில் நடைபெறும் ஒரு வினோதமான திருவிழா குறித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த ஊர் வழக்கப்படி, திருவிழா நாளில் ஒரு இளைஞரை அந்த ஊர் பெண்கள் பிடித்துவிட்டால், அன்று ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞரை அவர்கள் தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதற்காகப் பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து வாலிபர்களைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.



வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு இளைஞரை விடாமல் பெண்கள் துரத்துவதும், இறுதியில் அவரைச் சூழ்ந்து பிடிப்பதும் இடம் பெற்றுள்ளது. “இப்படியெல்லாம் கூட ஒரு விசித்திரமான திருவிழா இருக்குமா?” என்று பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஊர் மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், தற்போது சமூக வலைதளங்களில் இது பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.