அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு வயதுக் குழந்தையை பிட்புல் ரக நாய் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தக் குழந்தைக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் நாய் திடீரெனக் குழந்தையைக் கடிக்கத் தொடங்கியபோது, அங்கிருந்தவர்கள் அதைக் தடுக்கப் போராடியும் பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
A pit bull attacked a toddler on the streets of New York, but luckily a bystander was quick enough to choke the dog before it could do further harm the child.😳 pic.twitter.com/Yh6btEwVVm
— Rain Drops Media (@Raindropsmedia1) December 23, 2025
“>
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போதிலும், நாயின் உரிமையாளர் மீது எந்தவிதக் குற்றச்சாட்டையும் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும், உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காவல்துறையினரின் இந்த முடிவுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய ஆபத்தான நாய் ரகங்களை வளர்ப்பவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
