லண்டன் மாநகரின் வீதிகளில் இந்தியாவைச் சேர்ந்த புகையிலை மற்றும் குட்கா எச்சில் கறைகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சிகரமான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டனில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர், அங்குள்ள தெருக்களில் நடந்து சென்றபோது, நடைபாதைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த குட்கா கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வெறும் 30 நிமிட நடைப்பயணத்தில் மட்டும் அவர் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் குட்கா துப்பப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதனைப் பதிவு செய்துள்ளார். தூய்மையான நகரமாக கருதப்படும் லண்டனின் தெருக்களில் காணப்படும் இந்த அசுத்தம், அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரப் பண்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
View this post on Instagram
“>
இது குறிப்பாக, இந்தியர்கள் மற்றும் தெற்காசிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்தப் பிரச்சனை மிக மோசமாக இருப்பதாக அந்த பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களைப் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் எச்சில் துப்புவது, லண்டன் போன்ற சர்வதேச நகரங்களின் அழகையும் சுகாதாரத்தையும் சீர்குலைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் செயல் வெளிநாடுகளில் இந்தியர்களின் மீதான நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், பொது இடங்களில் ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம் என்றும் இந்தச் செய்தி வலியுறுத்துகிறது.
