கடும் மழையிலும் உணவை விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், மழையில் நனைந்தபடி சிக்னலில் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
குறிப்பாக, ஒரு காலில் மட்டும் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக்கொண்டு, மழையிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அவர் போராடும் காட்சி பார்ப்பவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “உங்கள் உணவு இன்று தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, இவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “மழை நேரங்களில் உணவை ஆர்டர் செய்வதைத் தவிர்க்கலாம்” என்றும், “வேகத்தை விட அவர்களின் உயிரே முக்கியம்” என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
“>
இதேபோல், ஹைதராபாத் மழையில் சிக்கிய ஒருவரை உணவை விநியோகம் செய்ய வந்த ஊழியர்கள் காப்பாற்றிய சம்பவத்தையும் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். நமக்குப் பிடித்த உணவை நாம் வீட்டில் அமர்ந்து ரசிப்பதற்குப் பின்னால், பலரின் கடுமையான உழைப்பும் தியாகமும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
