உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் மலைப்பகுதியில், பனிப்படலங்களுக்கு இடையே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மலையேறுபவர்களால் கைவிடப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், கிழிந்த கூடாரங்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் என எவரெஸ்டின் நான்காவது முகாம் போன்ற உயரமான பகுதிகள் மாசடைந்து காணப்படுகின்றன.
மேலும் இயற்கையின் உன்னதமான அடையாளமாகத் திகழும் இந்த இமயமலைச் சிகரம், மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் ஒரு “உயரமான குப்பைமேடாக” மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் க வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் அவல நிலையைச் சுட்டிக்காட்டும் காணொளிகளைக் கண்டு இணையவாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இதனையடுத்து எவரெஸ்டின் புனிதத்தையும் அதன் மென்மையான சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இன்னும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். மலையேறுபவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களைத் திரும்பக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்நிலையில் கழிவு மேலாண்மைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பது அல்லது குப்பைகளை அகற்றும் வரை மலையேற்றத்திற்குத் தற்காலிகத் தடை விதிப்பது போன்ற தீவிர நடவடிக்கைகளை நேபாள அரசு எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடையே கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
