நிச்சயிக்கப்பட்ட திருமண முறை இன்றும் நம் சமூகத்தில் பெண்களை வெறும் வேலைக்காரிகளாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே எதிர்பார்க்கிறது என்பதற்கு ஒரு பெண் இதய அறுவை சிகிச்சை நிபுணருக்கு நேர்ந்த இந்த அனுபவம் ஒரு சான்றாகும். தனது கடின உழைப்பால் உயிர்காக்கும் உயர் பதவியை அடைந்த அந்தப் பெண்ணிடம், திருமணப் பேச்சுவார்த்தையின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட கேள்விகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மேலும் “உன்னால் ஒரே நேரத்தில் 30 பேருக்கு சமைக்க முடியுமா?” என்றும், “உன் உடலில் இருக்கும் பச்சை குத்தலை  அழித்துவிட முடியுமா?” என்றும் அவர்கள் கேட்டது, நவீன காலத்திலும் கல்வி மற்றும் தகுதியைத் தாண்டி பெண்களை ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைக்க நினைக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nidhi Rathi (@nidhi_rathi.15)

“>

இந்த இணையத்தில் வைரலாகி வரும் இச்சம்பவம், “பெண்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், இறுதியில் அவர்கள் சமையலறைக்கும் மற்றவர்களின் விருப்பங்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும்” என்ற நச்சுத்தன்மை கொண்ட சமூக எதிர்பார்ப்புகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் தொழில்முறைத் திறமையைக் காட்டிலும், அவரது தனிப்பட்ட அடையாளங்களை மாற்றுவதற்கும் வீட்டு வேலைகளுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுவது வேதனைக்குரியது. இத்தகைய பிற்போக்குத்தனமான எதிர்பார்ப்புகளைத் துணிச்சலுடன் நிராகரித்த அந்தப் பெண்ணின் முடிவு, சுயமரியாதையைத் தேடும் பல இளைய தலைமுறைப் பெண்களுக்கு ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.