சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள் இந்திப் பாடல் ஒன்றைப் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், அவர் இந்திப் பாடலைப் பாடாமல், “மௌனமே பார்வையால்…” என்ற இனிமையான தமிழ்ப் பாடலைப் பாடி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்.