பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அன்ஷுல் உதையா, தனது வேலை மிகவும் சலிப்பாக இருப்பதாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றும் கூறி, அடுத்தகட்டத் திட்டம் ஏதுமின்றி வேலையை ராஜினாமா செய்த நிலையில், தற்போது நிலவும் மோசமான வேலைவாய்ப்புச் சூழலைக் கண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Aanshul Uthaiah (@aanshul.uthaiah)

சில வாரங்களுக்கு முன்பு, “நாளை நான் வேலையை விடப்போகிறேன், அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” என அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இருப்பினும், வேலையை விட்ட பிறகு புதிய வாய்ப்புகளுக்காக அவர் விண்ணப்பித்தபோது, பல நிறுவனங்கள் அனுபவம் மற்றும் திறமையைக் கேள்வி எழுப்பியதுடன், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையும் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

“திட்டம் ஏதுமின்றி வேலையை விட்டது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு” என்று கண்கலங்கியபடி புதிய வீடியோவை வெளியிட்டுள்ள அவர், தற்போதைய இளைஞர்களுக்கு வேலை திருப்தியை விட பொருளாதாரப் பாதுகாப்பு மிக முக்கியம் என்ற யதார்த்தத்தை உணர்த்தியுள்ளார். இக்கட்டான சூழலில் இருக்கும் தனக்கு யாராவது வேலை வாய்ப்பு இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.