கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடைபெற்ற விபத்தில், கர்நாடக பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது.
கர்நாடக பதிவெண் கொண்ட அந்த காரில் 5 பேர் பயணித்து வந்தனர். ஊத்தங்கரை அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த காருடன் மோதியதில் இரு கார்களிலும் பயணித்த மொத்தம் 8 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
